நீ தான்
--------
என் காதல் தேசமும் நீ
தான்
என் காதல் சுவாசமும் நீ
தான்
என் வாழ்வின் உறவுகள் நீ
தான்
என் பிரிவின் சோகங்கள் நீ
தான்
மனசு எழுதும் கவிதைகள் நீ
தான்
கவிதையில் மலரும்
உணர்வுகள் நீ தான்

நான் பேசும்
மௌனங்கள் நீ தான்
நான் கேட்கும்
வார்த்தைகள் நீ தான்
நான்
போகும் பாதையும் நீ தான்
நான்
வாழும் வாழ்க்கையும் நீ
தான்
நிலவு உறவாடும் வானமும் நீ
தான்
நினைவு உறவாடும் நெஞ்சமும்
நீ தான்
அலைகள் உறவாடும்
கரைகளும் நீ தான்
அன்பாய்
உறவாடும் உயிரும் நீ தான்

நான்
பாடும் ராகமும் நீ தான்
நான்
தூங்கும் தலையணை நீ தான்
நான்
காணும் உருவமும் நீ தான்
நான்
தேடும் ஜீவனும் நீ
தான்
பூமியில் சிந்தும்
மழைத்துளி நீ தான்
பூக்கள்
மலரும் சோலையும் நீ
தான்
நெஞ்சினில் தவளும்
நினைவுகள் நீ தான்
விழியினில்
மலரும் கனவுகள் நீ தான்...

Thanks To The Author